Home
Mobile

இவ்ளோ தானா? ரூ.10000 பட்ஜெட்ல புது மோட்டோ.. 16GB ரேம்.. AI கேமரா.. 5000mAh பேட்டரி!

வெறும் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 16 ஜிபி ரேம், ஏஐ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனோடும் மோட்டோ ஜி04 (Moto g04) போன் களமிறங்க இருக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு தேதி உறுதியாகிவிட்டது.

மோட்டோ ஜி34 5ஜி போனுக்கு அடுத்தபடியாக அதைவிட கம்மி பட்ஜெட்டிலான மோட்டோ ஜி04 போனை இந்திய மார்கெட்டில் களமிறக்க மோட்டோரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆகவே, அந்த போனின் முக்கிய அம்சங்களுடன் வெளியீட்டு தேதியையும் உறுதி செய்திருக்கிறது. இப்போது, முதலில் அம்சங்களை பார்ப்போம்.

பட்ஜெட்ல புது மோட்டோ.. 16GB ரேம்.. AI கேமரா.. 5000mAh பேட்டரி!

மோட்டோ ஜி04 அம்சங்கள் (Moto g04 Specifications): இந்த மோட்டோவில் 6.6 இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 14 ஓஎஸ் கிடைக்கும் போன்கள் மிகவும் குறைவாகும்.

இந்த மோட்டோ போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதன் 8 ஜிபி வேரியண்ட்டில் கூடுதலாக 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது.

16 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) வருகிறது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் ஆட்டோ நைட் விஷன் மோட் (Auto Night Vision) மோட் வருகிறது. இந்த போனில் மோட்டோ கெஸ்ச்சர்ஸ் (Moto Gestures) சப்போர்ட் வருகிறது.

இந்த பீச்சர் மூலம் ட்விஸ்ட் டூ ஓப்பன் கேமரா (Twist To Open Camera) போன்ற கெஸ்ச்சர்களை செய்து கொள்ளலாம். இந்த மோட்டோ ஜி04 போனானது, 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் (Speakers) வருகிறது. பிரீமியம் டிசைன் (Premium Design) கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல புது மோட்டோ.. 16GB ரேம்.. AI கேமரா.. 5000mAh பேட்டரி!

அதோடு பிளாக் (Black), கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன் ஸ்லிம் டிசைனில் 7.99 மிமி தடிமன் மற்றும் 178 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த அம்சங்களை மட்டுமே மோட்டோ நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அதோடு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மைக்ரோ சைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த மோட்டோ ஜி04 போனானது, வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை விவரங்கள் வெளியாகவில்லை.

இந்த போன் 4ஜி வேரியண்ட் என்பதால், ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் விற்பனைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், மார்கெட் வட்டாரங்கள் விலை விவரங்கள் கசிந்துவிட்டன. ஆகவே,
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம்.

அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், IP52 டஸ்ட் ரெசிஸ்டன்ட் ஆகியவை இந்த போனில் வர வாயப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Moto g04 With 16GB RAM To Launch in India on February 15 Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X