Home
Mobile

வெறும் ரூ.10,775 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது 2 மோட்டோ போன்கள்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி24 மற்றும் மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி24 (2024) அம்சங்கள் (moto g24 specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி24 போன் வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 537 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. 4ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன்.

 50MP கேமரா.. அறிமுகமானது 2 மோட்டோ போன்கள்.. எந்த மாடல்?

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 (Octa Core MediaTek Helio G85) 12என்எம் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி24 போன். மேலும் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner),3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, ஐபி52 ரேட்டிங், 5000எம்ஏஎச் பேட்டரி, 15W சார்ஜிங், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 803.11ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் மோட்டோ ஜி24 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 180 கிராம் ஆகும்.

 50MP கேமரா.. அறிமுகமானது 2 மோட்டோ போன்கள்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி04 (2024) அம்சங்கள் (moto g04 specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி04 போன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரே, ப்ரைட்னஸ் மோட், லைட் மோட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பின்பு 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த போன் விற்பனைக்கு வரும்.

16எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா வசதியுடன் மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மோட்டோ போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக யுனிசாக் டி606 பிராசஸர் (Unisoc T606 processor) வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி04 மாடல். பின்பு ஐபி52 ரேட்டிங், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 5000எம்ஏஎச் பேட்டரி, 10W சார்ஜிங் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோ ஜி04 போன். மேலும் இந்த போனின் எடை கூட 180 கிராம் ஆகும்.

 50MP கேமரா.. அறிமுகமானது 2 மோட்டோ போன்கள்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி04 மற்றும் மோட்டோ ஜி24 போன்கள் தற்போது ஐரோப்பாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த போன்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மோட்டோ ஜி04 போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.10,775-ஆக உள்ளது. பின்பு மோட்டோ ஜி24 போனின் விலை ரூ.11,680-ஆக உள்ளது.

அதேபோல் மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் கான்கார்ட் பிளாக் (Concord Black), சீ கிரீன் (Sea Green), சாடின் புளூ (Satin Blue)மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) நிறங்களில் வெளிவந்துள்ளது. பின்பு மோட்டோ ஜி24 ஆனது மேட் சார்கோல் (Matte Charcoal), ஐஸ் கிரீன் (Ice Green), புளூபெர்ரி (Blueberry) மற்றும் பிங்க் லாவெண்டர் (Pink Lavender) நிறங்களில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
moto g04 and moto g24 launched: check specifications, price, Colors
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X