Home
Mobile

ஆர்டர் மிரளும்.. ரூ.7,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக 16 ஜிபி ரேம், 1டிபி மெமரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், நைட் விஷன் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட மோட்டோ ஜி04 போனானது, வெறும் ரூ.7,999 பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கிறது.

மோட்டோ ஜி04 அம்சங்கள் (Moto g04 Specifications): இந்த மோட்டோவில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 537 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு (Panda Glass Protection) வருகிறது.

ரூ.7,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த மோட்டோ ஜி04 போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. இந்த பட்ஜெட்டில் 14 ஓஎஸ் கிடைப்பது முதல் முறையாகும். அதோடு ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ரூ.7,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ஆகவே, டூயல் சிம் (Dual SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த மோட்டோ போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

IP52 தர வாட்டர் ரெபிலென்ட் ரெசிஸ்டன்ட் (Water Repellent Resistant) கொண்டுள்ளது. இந்த மோட்டோ ஜி04 போனில் 16 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு (Portrait), நைட் விஷன் (Night Vision), எச்டிஆர் (HDR) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதோடு ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 178.8 கிராம் எடை கொண்டிருக்கிறது.

பிரீமியம் டிசைனில் கார்கார்ட் பிளாக் (Concord Black), சீ கிரீன் (Sea Green), சாடின் ப்ளூ (Satin Blue) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.6,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,999ஆகவும் இருக்கிறது.

வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா (Motorola) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.750 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g04 Launched Under Rs 8000 Sale From February 22 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X