விராட் கோஹ்லி எடிஷன் மோட்டோரோலா கருவி அறிமுகம்.!!

By Meganathan
|

ஃபேன்பாக்ஸ் மோட்டோ ஜி டர்போ விராத் கோஹ்லி எடிஷன் வகை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் கன்சல்டன்ட் மற்றும் ப்ரைவஸிப்ளெக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த கருவியினை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில் ரூ.16,999 என இந்த கருவியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபேன்பாக்ஸ்' இல் மோட்டோ ஜி டர்போ விராட் கோஹ்லி எடிஷன், கோஹ்லி சின்னம், செயலி, சிறிய பேட் மற்றும் ஒரு ஆண்டு சந்தாவுடன் விராத் கோஹ்லி கையொப்பமிட்ட ஃபேன்பாக்ஸ் க்ளபின் வரவேற்பு கடிதம், போன்றவை அடங்கும்.

அப்டேட்

அப்டேட்

இந்த க்ளப் உறுப்பினர்கள், கோஹ்லி சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும் பிரத்யேக அறிவிப்புகளையும் கோஹ்லி மூலமாகவே தெரிந்து கொள்வர்.

ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட்

இந்த ஃபேன்பாக்ஸ் கருவியின் விற்பனை மே மாத முதல் வாரம் துவங்கும் என்றும், இந்த கருவியினை ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு

பரிசு

'எனது ரசிகர்களின் அன்பு கிடைக்க நான் கொடுத்த வைத்திருக்க வேண்டும். விராத் ஃபேன்பாக்ஸ் மூலம் எனது ரசிகர்களுடன் ஆன்லைன் சாட் செய்து அவர்களை சந்திக்க மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றேன். முன்பை விட அதிகமாக ரசிகர்களுடன் உறையாட விராத் ஃபேன்பாக்ஸ் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்' என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

வெளியீடு

வெளியீடு

மோட்டோ ஜி டர்போ இந்திய சந்தையில் ரூ.14,999க்கு வெளியிடப்பட்டு தற்சமயம் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

திரை

திரை

5 இன்ச் திரை ஃபுல் எச்டி ரெசல்யூஷன் கொண்டிருக்கும் இந்த கருவியில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

சார்ஜிங்

சார்ஜிங்

2,470 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கருவியில் ஃபாஸ்ட்-சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இயங்குதளம்

மேலும் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளமும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மைக்ரோ எஸ்டி மூலம் மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

13 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவுடன், டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஐபி67 சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதியும் இருக்கின்றது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐபோன் விலை ரூ.50,000, அன்லாக் செய்ய ரூ.8.9 கோடி.!!

வீடியோ : வீட்டிலேயே ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்வது எப்படி.??

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G Turbo Virat Kohli edition launched in India Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X