Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 68W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஃபுல்எச்டிபிளஸ் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், ஈசிம் கனெக்டிவிட்டி, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி போன்ற பீச்சர்களுடன் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (Moto G Stylus 5G) களமிறங்கி இருக்கிறது. பில்ட்-இன் ஸ்டைலஸ் வருவதால், மோட்டோ பிரியர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மோட்டோவில் பில்ட்-இன் ஸ்டைலஸ் (Built-in Stylus) கிடைப்பதால், ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஹேண்ட் ரைட்டிங் கால்குலேட்டர் (Handwriting Calculator), டூட்லிங் (Doodling) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, சிப்செட் போன்ற பீச்சர்களும் மிட்-ரேஞ்ச்சில் மிரளவிடும்படி இருக்கின்றன.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 68W சார்ஜிங்!

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி 2025 அம்சங்கள் (Moto G Stylus 5G 2025 Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. மோட்டோவின் மை யுஎக்ஸ் (My UX) மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிடைக்கிறது.

சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின் (Photo Enhancement Engine) உள்ளது.

மேலும், மோட்டோ ஏஐ (Moto AI) கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி ரேம் பூஸ்ட் (RAM Boost) சப்போர்ட் கிடைக்கிறது. 256 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது. 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே உள்ளது.

இந்த டிஸ்பிளேவில் சூப்பர் எச்டி (Super HD) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி போனில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது.

MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி லெதர் பேனலுடன் ஜிப்ரால்டர் சீ (Gibraltar Sea) மற்றும் வெப் பான்டோன் (Web Pantone) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஈசிம் கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,505ஆக இருக்கிறது. இப்போது, யுஎஸ் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ஏப்ரல் 17ஆம் தேதி அங்கு விற்பனை தொடங்குகிறது. அமேசான், பெஸ்ட்ஃபை.காம் போன்ற தளங்களில் ஆர்டருக்கு வர இருக்கிறது. குளோபல் மார்கெட்டிலும் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Moto G Stylus 5G 2025 With 50MP Camera 8GB RAM Sale From April 17 Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X