தலைவன் வேற ரகம்.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. Quad கேமரா.. 15W வயர்லெஸ் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய கேமரா பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்படியான பட்ஜெட்டில் பிஓஎல்இடி டிஸ்பிளே, 50எம்பி அல்ட்ரா பிக்சல் கேமரா, 2டிபி மெமரி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி 2024 (Moto G Stylus 5G 2024) வெளியாகியிருக்கிறது.
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி 2024 அம்சங்கள் (Moto G Stylus 5G 2024 Specifications): இந்த மோட்டோவில் 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது. 2.5D கர்வ்ட் கிளாஸ் டிசைன் கொண்டிருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி (அல்ரா வைடு + மேக்ரோ விஷன் + டெப்த்) கேமரா வருகிறது. அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) கொண்டிருக்கிறது. அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங், போர்ட்ராய்டு வீடியோ டூயல் (Portrait Video Dual), ஸ்பாட் கலர் வீடியோ டைம்லேப்ஸ் (Spot Color Video Timelapse) சப்போர்ட் வருகிறது.
அல்ட்ரா-ரெஸ் (Ultra-Res), டூயல் கேப்ச்சர் (Dual Capture), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ மோட் (Pro Mode) போன்ற கேமரா பீச்சர்கள் மற்றும் 8X டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 32 எம்பி செல்பீ வருகிறது.
இந்த கேமராவிலும் டூயல் கேப்ச்சர், ஸ்பாட் கலர், போர்ட்ராய்டு வீடியோ போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு இந்த மோட்டோ மாடல் பட்ஜெட்டிலும் பக்காவான தேர்வாக இருக்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) மற்றும் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) சப்போர்ட் வருகிறது.

இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD card) சிலாட் வருகிறது. நானோ சிம் + ஈசிம் சப்போர்ட் உள்ளது.
அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Under-display fingerprint Scanner), 3.5 மிமீ ஹெட்செட் ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த மோட்டோவில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி வருகிறது. கேரமல் லட்டே (Caramel Latte) மற்றும் ஸ்கார்லெட் வேவ் (Scarlet Wave) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி போனின் விலை ரூ.33,314ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பிஓஎல்இடி டிஸ்பிளே, அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி கேமரா, 15W வயர்லெஸ் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் வருவதால், விற்பனையில் சக்கைப்போடு போட வாய்ப்புள்ளது. இந்திய கேமரா பிரியர்களுக்கும் இந்த பக்கா தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








