இப்படி டிசைன் பண்ணா யாருங்க விடுவாங்க.. அடுத்த மோட்டோரோலா 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
சில மாதங்களுக்கு முன்பு தான் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2026 (Moto G Stylus 2026) மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா. அதாவது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2026 போனின் படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஆகவே இந்த போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
டர்பிள் ரியர் கேமராக்கள், பிளாட் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2026 ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆனால் இந்த போனின் விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த போனின் அனைத்து விவரக்குறிப்புகள் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 STYLUS Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் வெளிவந்துள்ளது. அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
அதுவும் 6.7-இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2712 x 1220 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3), அக்வா டச் (Aqua Touch), 3000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன.
மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 446 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக ஸ்டைலஸ் பென் கிடைப்பதால் 2.5டி கர்வ்ட் டிசைன் இந்த போனில் கிடைக்கிறது. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
அதேபோல் மை யுஎக்ஸ் (My UX) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் பெற்றுள்ளது இந்த போன்.
குறிப்பாக 50 எம்பி மெயின் கேமரா (Sony LYT 700C) + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 3 இன்-1 லைட் சென்சார் ஆகிய ரியர் கேமரா அமைப்புகளுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவும் இந்த போனில் உள்ளது.

அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), ஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology), குவாட் பிடிஏஎப் (Quad PDAF)
மற்றும் 4K ரெக்கார்டிங் சப்போர்ட், ஃபிளிக்கர் ரெடக்சன், ஆர்ஜிபி சென்சார் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன.
5000mAh பேட்டரி மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. தற்போது மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் ரூ.20,999 விலையில் வாங்க கிடைக்கிறது.
Photo Credit: XpertPick


Click it and Unblock the Notifications








