மிரள வைக்கும் Motorola.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 போனின் 360 டிகிரி வீடியோ ஆன்லைனில் வெளியானது. குறிப்பாக இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 அம்சங்கள் (Moto G Stylus 2024 specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) ஐபிஎஸ் எல்சிடி ( IPS LCD) டிஸ்பிளே உடன் வெளிவரும் இந்த அட்டகாசமான மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் (Qualcomm Snapdragon chipset) வசதியுடன் இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 போன் அறிமுகமாகும். குறிப்பாக மீடியாடெக் சிப்செட் விட ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட போன்களை தேர்வு செய்வது நல்லது. அந்தவகையில் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 போன் வெளிவரும் என்பதால் நம்பி வாங்கலாம்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீடிப்பு நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் (5000mAh battery) பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 190 கிராம் எடை உடன் இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 போன் அறிமுகமாகும்.
அதேபோல் 5ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி மற்றும் புளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2024 போன் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.
photo courtesy:@ONLEAKS x @SMARTMANIA, gizmochina


Click it and Unblock the Notifications








