மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸின் மறுபெயரிடப்பட்ட பதிப்பை ஜெர்மனியில் மோட்டோ ஜி ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ஜெர்மனியில் யூரோ 329(இந்திய மதிப்பில் ரூ.27,000) ஆக உள்ளது. மேலும் இந்தஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை தெளிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1,080 x 2,300 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் என மொத்தம் மூன்று கேமரா ஆதரவு இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கைநுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,
மேலும் 15வாட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4 ஜி எல்டிஇ, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் வி 5.0 மற்றும் என்எப்சி ஆதரவு, ஜி.பி.எஸ், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப்,ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார்என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








