Home
Mobile

பவர் சீட்ல இருக்காது சார்... இந்த 5ஜி போனில் கூட இருக்கும்: தரமான சம்பவம் செய்த Motorola.!

மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதேபோல் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம். இந்நிலையில் புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதாவது இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 பவர் சீட்ல இருக்காது சார்... இந்த 5ஜி போனில் கூட இருக்கும்.!

அதாவது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 9306என்எம் பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 பவர் சீட்ல இருக்காது சார்... இந்த 5ஜி போனில் கூட இருக்கும்.!

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் ஆரம்ப விலை $299.99 (இந்திய மதிப்பில் ரூ.24,580). பின்பு இந்த போன் அமெரிக்காவில் ஏப்ரல் 13-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Moto G Power 5G smartphone with 5000mAh battery, 50MP rear camera launched : check price,specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X