மிரண்டுபோன மார்க்கெட்.. கம்மி பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 30W சார்ஜிங்.. புதிய மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் அடுத்து நிறுவனம் அடுத்து ஒரு அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் உலக சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) எனும் ஸ்மார்ட்போன் தான் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் ஆனது கீக்பெஞ்ச் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) அம்சங்கள் (Moto G Power 5G 2024 specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7020 (MediaTek Dimensity 7020) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். பின்பு இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் 1200 x 1600 பிக்சல்ஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் வெளிவரும் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த மோட்டோ போன் வெளிவரும். குறிப்பாக மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








