Home
Mobile

சம்பவம் இருக்கு.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. புதிய மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

அதன்படி பன்ச் ஹோல் டிஸ்பிளே, எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன். பின்பு ஆர்க்கிட் டின்ட் (Orchid Tint ) மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space ) நிறங்களில் இந்த புதிய மோட்டோ போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

சம்பவம் இருக்கு..  புதிய மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும. மேலும் 1200 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதேபோல் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இருக்கு..  புதிய மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?

ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) போன் ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy: MSPowerUser

Best Mobiles in India

English summary
Moto G Power 5G 2024 design and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X