யாருமே எதிர்பார்க்கல.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. அறிமுகமானது புது Moto 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி பவர் 2026 (Moto G Power 2026) மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 50எம்பி கேமரா, டால்பி அட்மாஸ், ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோ ஜி பவர் 2026 போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி பவர் 2026 அம்சங்கள் (Moto G Power 2026 Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி பவர் 2026 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2388× 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி பவர் 2026 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
மோட்டோ ஜி பவர் 2026 ஸ்மார்ட்போன் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + குவாட் பிக்சல் தொழில்நுட்பம் + 8எம்பி அல்ம்ரா வைடு கேமரா ஆகிய கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன. IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி பவர் 2026 போன் வெளிவந்துள்ளது.
MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி பவர் 2026 ஸ்மார்ட்போன். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி பவர் 2026 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி 2.0, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோ ஜி பவர் 2026 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் எடை 208 கிராம் ஆகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
5200mAh பேட்டரி உடன் மோட்டோ ஜி பவர் 2026 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வசதியும் இந்த போனில் உள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக இந்த மோட்டோ ஜி பவர் 2026 ஸ்மார்ட்போன் தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 8-ம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் விலை USD 299.99 (இந்திய மதிப்பில் ரூ.27,290)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








