மிரண்டுபோன மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. 30W சார்ஜிங்.. அறிமுகமானது புது Motorola போன்கள்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இரண்டு புதிய போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மோட்டா ஜி பவர் 2025 (Moto G Power 2025) மற்றும் மோட்டோ ஜி 2025 (Moto G 2025) என்ற போன்களை தான் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி பவர் 2025 அம்சங்கள் (Moto G Power 2025 Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி பவர் 2025 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் மோட்டா ஜி பவர் 2025 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் இந்த போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி பவர் 2025 ஸ்மார்ட்போன்.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பவர் 2025 ஸ்மார்ட்போன். மேலும் 16எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 30W TurboPower வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பவர் 2025 போன்.
மோட்டோ ஜி 2025 அம்சங்கள் (Moto G 2025 Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி 2025 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் மோட்டோ ஜி 2025 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக IP52 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் இந்த போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி 2025 ஸ்மார்ட்போன். மேலும் 16எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 30W வயர்டு சார்ஜிங், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி 2025 போன்.
ஆனால் மோட்டோ ஜி பவர் 2025 மற்றும் மோட்டோ ஜி 2025 போன்கள் தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த இரண்டு போன்களும் வேறு பெயரில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மோட்டோ ஜி 2025 போனின் விலை $199.99 (இந்திய மதிப்பில் ரூ.17,314)-ஆக உள்ளது. பின்பு மோட்டோ ஜி பவர் 2025 போனின் விலை $299.99 (இந்திய மதிப்பில் ரூ.25,975)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








