மிரள வைக்கும் மோட்டோரோலா.. பட்ஜெட் விலை.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மோட்டோரோலா தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பா இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி பிளே (2024) (Moto G Play (2024)) மாடலை தான் விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

மோட்டோ ஜி பிளே (2024) அம்சங்கள் (Moto G Play 2024 Specifications): 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz refresh rate), 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல் அறிமுகமாகும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குவால்காம் ஆக்டோ-கோர் (Qualcomm's octa-core) பிராசஸர் மூலம் இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல் இயங்கும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோ ஜி பிளே (2024) அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 50எம்பி சிங்கிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல் அறிமுகமாகும். பின்பு இந்த போனில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல் அறிமுகமாகும்.
அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி பிளே (2024) மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு இந்த போனில் உள்ளது.

குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.
photo courtesy: @ONLEAKS x @SMARTmania.cz


Click it and Unblock the Notifications