Home
Mobile

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு நல்ல Moto போன்-ஆ: காத்திருப்போம்.!

மோட்டோரோலா நிறுவனம் நிறுவனம் மோட்டோ எக்ஸ்40 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் உடன் மோட்டோ ஜி பிளே (2022) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் எனத் தெரிகிறது.

மோட்டோ ஜி பிளே (2022)

மோட்டோ ஜி பிளே (2022)

அதாவது வரும் மாதங்களில் இற்த மோட்டோ ஜி பிளே (2022) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ ஜி பிளே (2022) ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

16எம்பி பிரைமரி கேமரா

16எம்பி பிரைமரி கேமரா

இந்த மோட்டோ ஜி பிளே (2022) ஸ்மார்ட்போன் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி உ

5000 எம்ஏஎச் பேட்டரி உ

மோட்டோ ஜி பிளே (2022) ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ போன் அறிமுகமாகும்.

6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே

6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே

மோட்டோ ஜி பிளே (2022) ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்

மோட்டோ ஜி பிளே (2022) ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மோட்டோ போன்.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி72

மோட்டோ ஜி72

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

108எம்பி மெயின் கேமரா

108எம்பி மெயின் கேமரா

மோட்டோ ஜி72 ஆனது 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின விலை ரூ.18,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G Play (2022) to launch soon with Helio G37 SoC and stunning design: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X