விரைவில் சந்தைக்கு வரும் மோட்டோ ஜி ப்ளே(2021): எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

|

6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 4850 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களோடு மோட்டோ ஜி ப்ளே (2021) அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய மோட்டோரோலா ஜி ப்ளே ஸ்மார்ட்போன்

புதிய மோட்டோரோலா ஜி ப்ளே ஸ்மார்ட்போன்

மோட்டோரோலாவின் மோட்டோ ரேசர் மாடல் ஸ்மார்ட்போனானது இந்தாண்டின் ப்ரீமியம் அறிமுகங்களில் ஒன்றாகும். மோட்டோ இ7 உள்ளிட்ட பல்வேறு இடைநிலை ஸ்மார்ட்போன்களை நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மாடல் எண் எக்ஸ்டி- 21717 உடனான புதிய மோட்டோரோலா ஜி ப்ளே ஸ்மார்ட்போன் கீக்பெஞ்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்

குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்

மோட்டோ ஜி ப்ளே 1.80GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி மூலம் மோட்டோ ஜி ப்ளே இயக்கப்படும் எனவும் சில தகவல்கள் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் அம்சத்தோடு வரும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என கீக்பெஞ்ச் பட்டியல் தெரிவிக்கிறது. மோட்டோ ஜி ப்ளே அம்சங்கள் குறித்து முழு தகவல் தெரியவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே இடம்பெறும் எனவும் 6.5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் எனவும் சில தகவல்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றன.

20 வாட்ஸ் வேகமான சார்ஜிங்

20 வாட்ஸ் வேகமான சார்ஜிங்

எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி இருக்கும். பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பும், 20 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவும் இருக்கும் என கூறப்படுகிறது. இது 4850 எம்ஏஎச் பேட்டரியோடு வர வாய்ப்பிருக்கிறது.

மோட்டோ ஜி 9 பவர்

மோட்டோ ஜி 9 பவர்

விரைவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மற்றும் மோட்டோ ஜி 9 பவர் ஆகியவை இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தாண்டு அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. ரூ.20,000 என்ற விலை பட்டியலில் இந்த ஸ்மார்ட்போன் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G Play 2021 Spotted on Geekbench May Launching Soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X