போட்டான் பாரு மோட்டோ.. பட்ஜெட்ல SONY கேமரா.. 7000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. 6GB ரேம்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த மோட்டோ பிரியர்களும் வெயிட்டிங் மோடில் காத்திருக்கும்படி மோட்டோ ஜி மேக்ஸ் (moto g max) ஸ்மார்ட்போனின் வெளியீடு இருக்கப் போகிறது. பட்ஜெட்டில் பிரீமியம் குவாலிட்டி மற்றும் பேட்டரி கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. முழு பீச்சர்களும் வெளியாகிவிட்டது. இப்போது, விலை விவரங்கள் கசிந்துள்ளன.
வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. மோட்டோ தளத்தில் முழு பீச்சர்களும் வெளியாகிவிட்டன. ஆனால், விலை தெரியாமல் இருந்தது. இப்போது, கசிந்துவிட்டது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம்.

மோட்டோ ஜி மேக்ஸ் அம்சங்கள் (moto g max Specifications): 6.72 இன்ச் (2400p x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1050 எச்பிஎம் மோட் பிரைட்னஸ் கிடைக்கிறது.
வாட்டர் டச் (Water Touch) மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் டிசைன் (Water Resistant Design) கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வருகிறது.
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) டியூரபிலிட்டி கிடைக்கிறது. சோனி லைட்டியா 600 (Sony LYTIA 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கிடைக்கிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8x டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், ஷாட் ஆப்டிமைசேஷன், நைட் விஷன் மோட் ஆட்டோ, ப்ரோ மோட் மற்றும் போர்ட்ராய்டு எச்டிஆர் போன்ற கேமரா பீச்சர்கள் உள்ளன.
30W டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.60 எம்எம் தடிமன் கொடுக்கப்பட்டு உள்ளது. 213 கிராம் எடை கொடுத்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 2 ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. பான்டோன் ஸ்டார்கேசர் (PANTONE Stargazer), பான்டோன் அலாஸ்கன் ப்ளூ (PANTONE Alaskan Blue) மற்றும் பான்டோன் மலகா (PANTONE Malaga) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications