பிச்சிக்குது விற்பனை.. SONY கேமரா.. 7000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. புது MOTO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
மோட்டோ பிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த மோட்டோ ஜி மேக்ஸ் (moto g max) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே தள்ளுபடி போக கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.26,999 விலைக்கு வாங்கலாம். அதுவே, பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால், ரூ.2,350 தள்ளுபடி கிடைக்கும்.

ஆகவே, ரூ.25,649 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. பான்டோன் ஸ்டார்கேசர் (PANTONE Stargazer), பான்டோன் அலாஸ்கன் ப்ளூ (PANTONE Alaskan Blue) மற்றும் பான்டோன் மலாகா (PANTONE Malaga) ஆகிய கலர்களில் இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.
மோட்டோ ஜி மேக்ஸ் அம்சங்கள் (moto g max Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன. மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம்.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.72 இன்ச் (2400p x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு வாட்டர் டச் (Water Touch) கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz டச் சாம்பிளிங் ரேட், 1050 எச்பிஎம் மோட் பிரைட்னஸ் மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
மெயின் கேமராவுக்கு சோனி லைட்டியா 600 (Sony LYTIA 600) சென்சார் மற்றும் மேட்டோ ஸ்மார்ட்போன்களில் பிரத்யேகமாக கிடைக்கும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) வருகிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 8x டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது.
30W டர்போபவர் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 8.60 எம்எம் தடிமன் வருகிறது. ஆகவே, ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இது ஏற்றதாக இருக்காது. எடையும் 213 ஆக இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் டிசைன் (Water Resistant Design) மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications