Home
Mobile

பிளிப்கார்ட் ருத்ர தாண்டவம்.. 50MP ரியர் கேமரா.. 32MP செல்பி கேமரா.. ஆஃபரில் Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான மோட்டோ ஜி மேக்ஸ் (moto g max) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி மேக்ஸ்(moto g max) ஸ்மார்ட்போனுக்கு 49 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் ருத்ர தாண்டவம்.. ஆஃபரில் மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி மேக்ஸ் அம்சங்கள் (Moto G Max Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080 x 2,400 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் புரொடெக்சன்உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதுவும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மாரட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.

மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி Sony LYTIA 600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும் மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

பிளிப்கார்ட் ருத்ர தாண்டவம்.. ஆஃபரில் மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?

பான்டோன் அலாஸ்கன் ப்ளூ, பான்டோன் மலகா மற்றும் பான்டோன் ஸ்டார்கேசர் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும். MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. 5ஜி, ப்ளூடூத் 5.4, வைஃபை 5, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த போன் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமா சார்ஜ் செய்துவிட முடியும்.

Best Mobiles in India

English summary
Moto G Max with 4GB RAM available at 49 percent discount in Flipkart Big Billion Days sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X