நாளை விற்பனைக்கு வரும் புது Moto 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. Sony கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் மோட்டோ ஜி மேக்ஸ் (moto g max) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த புதிய மோட்டோ ஜி மேக்ஸ் போன் நாளை முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை, அம்சங்கள் மற்றும் சலுகைகள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. பான்டோன் அலாஸ்கன் ப்ளூ, பான்டோன் மலகா மற்றும் பான்டோன் ஸ்டார்கேசர் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

மோட்டோ ஜி மேக்ஸ் அம்சங்கள் (Moto G Max Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080 x 2,400 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் புரொடெக்சன்உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதுவும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் மூன்று வருடப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மாரட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.
மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி Sony LYTIA 600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும் மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.
மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. 5ஜி, ப்ளூடூத் 5.4, வைஃபை 5, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த போன் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமா சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications