Home
Mobile

ஆகஸ்ட் 14 வரை வெயிட் பண்ணுங்க.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. வருகிறது Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி மேக்ஸ் (moto g max) ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி மேக்ஸ் அம்சங்கள் (Moto G Max Specifications): 6.72-இன்ச் 1.5K அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1272 x 2772 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆகஸ்ட் 14 வரை வெயிட் பண்ணுங்க.. வருகிறது Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மாரட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

50எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும் மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

ஆகஸ்ட் 14 வரை வெயிட் பண்ணுங்க.. வருகிறது Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அஸுல் கார்லோ மற்றும் கிராஃபைட் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். 5ஜி, ப்ளூடூத் 5.4, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமா சார்ஜ் செய்துவிட முடியும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000-க்கு கீழ் இந்த புதிய மோட்டோ ஜி மேக்ஸ் மாடல் அறிமுகமாகும்.

Image Credit: Motorola

Best Mobiles in India

English summary
Moto G Max India Launch Date Announced: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X