Home
Mobile

கலைகட்டும் புக்கிங்..! கலக்கி கொண்டிருக்கும் மோட்டோ ஜி..!

இணையதளத்தில் மட்டுமே கலக்கி கொண்டு இருந்த கூகுள் தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளது.

அதற்கேற்ப்ப மோட்டோ ரோலோவை கூகுளி வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும் தற்போது மோட்டோ ஜி(Moto G) என்ற மொபைல் வெளிவிட்டு விட்டது கூகுள்.

இந்த மொபைல் வரும் ஐனவரி மாதம் விற்பனைக்கு வெளிவந்தாலும் இதற்கான புக்கிங்குகள் இப்போதே பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது அதற்கு காரணம் அதன் குறைந்த விலையும் அதில உள்ள ஆப்ஷன்களும் தான்.

4.5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் ஐ போன் 5S ஸ்கிரினை விட அதிக கிளாரிட்டி திறன் கொண்டது மேலும் இதில் Snapdragon 400 SoC with a 1.2 GHz quad-core பிராஸஸர் உள்ளது.

இந்த பிராஸஸர் மிகவும் வேகமாக செயல்படும் பிராஸஸர்களில் ஒன்றாகும் அதோடு இதில் 1GB ரேம், 5MP க்கு கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா என அனைத்தும் இதில் கிடைக்கிறது.

இது அனைத்தயும் விட இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் இதில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் வெளிவருகிறது.

மேலும் இந்த மொபைல் 16GB க்கு இன்டர்நெல் மெமரியும் கொண்டு வெளிவர இருக்கிறது இந்த மொபைல் ஏற்கனவே பிரெசிலில் வெளியிட்டுவிட்டனர்.

நம் இந்தியாவிற்கு இது ஜனவரி மாதம் வர இருக்கிறது இதன் விலை தோரயமாக 12 ஆயிரம் முதல் 14 ஆயித்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு கிட்கேட்டுன் வெளிவரும் மொபைல் இது என்பதால் இதற்கு புக்கிங் கலைகட்டியுள்ளது இதோ அந்த மொபைலின் படங்கள் மற்றும் அதன் வெளியீட்டு விழா படங்களை பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

மோட்டோ ரோலா கம்பெனியை கூகுள் வாங்கிய பிறகு இந்த மொபைலை வெளியிடுவதால் இதன் எதிர்பாப்பு அதிகமாகி இருக்கிறது

#2

#2

பிரேசிலில் இந்த மொபைல் விற்பனை மிக சூடாக நடந்து கொண்டிருக்கிறது

#3

#3

இதில் உள்ள இமெஜிங் ஆப்ஸ் நீங்கள் போட்டோ எடுக்கும் போதே எந்த மாதிரி இருக்க வேண்டும் என ஆப்ஷன் கொடுக்கிறது

#4

#4

இந்த மொபைலுக்கு மட்டும் பிரதியோகமாக கூகுள் டிரைவில் 50GB க்கு தகவல்களை சேமித்து கொள்ளும் ஆப்ஷனை கூகுள் வழங்குகிறது

#5

#5

இதில் பல உபயோகமான ஆப்ஸ்களை கூகுளே நமக்கு தருகிறது மொபைலுடன்

#6

#6

இது டூயல் சிம் ஆப்ஷன்ஸூடன் வெளிவருகிறது

#7

#7

7 வித கலர் கொண்ட பேக் பேன்ல்கள் இந்த மொபைலுடன் கிடைக்கிறது

#8

#8

மேலும் இதில் அதனுடன் வரும் ஹெட்போன் ஸ்டிரியோ ஹெட்போன்கள் ஆகும்

#9

#9

இந்த மொபைல் நிச்சயம் இந்திய மொபைல் சந்தையில் தனி இடம் பிடிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்

#10

#10

மேலும் இது வாட்டர் ப்ரூப் மொபைல் என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சம்..

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X