இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்.! விலை? என்னென்ன சலுகைகள்?
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.

மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000-வரை தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ஃப்ரோஸ்டெட் சில்வர் மற்றும் வல்கானிக் க்ரே உள்ளிட்ட இரண்டு சுவாரஸ்யமான வண்ண விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் Volcanic Grey மற்றும் Frosted Silver நிறங்களில் வெளிவந்துள்ளது.

வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications