மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் முழுவிவரம்.!

|

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி 5ஜி பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பற்றிய தகவலை வெளியிடவில்லை. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

6.7-இன்ச் எப்எச்டி பிளஸ்

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
1080 × 2520 பிக்சல் திர்மானம் மற்றும் 21:9 என்ற திரைவிகதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டபல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில்

புதிய மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765 7என்எம் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

வசதியை கொண்டுள்ளது இந்த

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பிரைமரி சென்சார்

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் +5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 16எம்பி+ 8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பிளஸ் ஸ்மார்ட்போனில்

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 20வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.! பலே திட்டம்.!வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.! பலே திட்டம்.!

 ஆதரவுகளை

5 ஜி, 4 ஜி, வோல்டிஇ, வைஃபை 6 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5 ஜிஹெர்ட்ஸ்), புளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ,என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தமோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் விலை

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,495-ஆக உள்ளது.6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,715-ஆக உள்ளது.
விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto G 5G Plus Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X