கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: மோட்டோ ஜி 5ஜி, மோட்டோ ஜி9 விரைவில் அறிமுகம்!

|

மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி மற்றும் மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு அம்சங்களோடு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 5ஜி மற்றும் மோட்டோ ஜி 9 பவர்

மோட்டோ ஜி 5ஜி மற்றும் மோட்டோ ஜி 9 பவர்

மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி மற்றும் மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன்கள் இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பதை டிப்ஸ்டர் முகுல்சர்மா உறுதிப்படுத்தியுள்ளார். அறிமுகம் விரைவில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும் சரியான தேதி தெரியவில்லை. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிஐஎஸ் சான்றிதழ் பெற்றவையாகும், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மோட்டோ ஜி 5ஜி குறைந்த விலையில் இருக்கும்.

மோட்டோ ஜி 5ஜி, மோட்டோ ஜி 9 பவர் எதிர்பார்க்கப்படும் விலை

மோட்டோ ஜி 5ஜி, மோட்டோ ஜி 9 பவர் எதிர்பார்க்கப்படும் விலை

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,150 ஆக இருக்கலாம், மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் விலை சுமார் ரூ.17,500 ஆக இருக்கலாம். எதிர்பார்க்கப்படும் விலையில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் விலையில் அதிக மாற்றம் இருக்காது. விரைவில் அதிகாரப்பூர்வ விலை வெளியாகும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்

மோட்டோ ஜி 5ஜி எச்டிஆர் 10 ஆதரவுடன் 6.7 இன்ச் மேக்ஸ் விஷன் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்கும். மோட்டோ ஜி 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

வாட்ஸ் அப்பில் தமிழில் டைப் செய்தும் எழுதியும் மெசேஜ் அனுப்புவது எப்படி?

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

மோட்டோ ஜி9 பவர்: அம்சங்கள்

மோட்டோ ஜி9 பவர்: அம்சங்கள்

மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் ஐபிஎஸ் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி இருக்கிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி இருக்கிறது.

மோட்டோ ஜி 9 பவர்: கேமரா

மோட்டோ ஜி 9 பவர்: கேமரா

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என மூன்று கேமரா இருக்கிறது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G 5g, Moto G9 Launching Soon in India With 6000 mAh battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X