இரண்டு புதிய 5ஜி போன்களை அறிமுகம் செய்த Motorola.. 5200mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இன்று உலக சந்தையில் புதிய மோட்டோ ஜி 5ஜி 2026 (moto g 5G 2026) மற்றும் மோட்டோ ஜி பிளே 5ஜி 2026 (moto g Play 5G 2026) ஆகிய போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி 5ஜி 2026 அம்சங்கள்: 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி 5ஜி 2026 போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1604 × 720 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் பிராசஸர் மோட்டோ ஜி 5ஜி 2026 போனில் உள்ளது. பின்பு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (dust and splash resistance) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோ ஜி 5ஜி 2026 போன். மேலும் 32எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டால்பி அட்மாஸ்(Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன.
5200mAh பேட்டரி மற்றும் 30W சார்ஜிங் சார்ஜிங் மோட்டோ ஜி 5ஜி 2026 போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. பான்டோன் ஸ்லிப்ஸ்ட்ரீம் (Pantone Slipstream), பான்டோன் கேட்லியா ஆர்க்கிட் (PANTONE Cattleya Orchid) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
மோட்டோ ஜி பிளே 5ஜி 2026 அம்சங்கள்: 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி பிளே 5ஜி 2026 போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1604 × 720 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது.
குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் பிராசஸர் மோட்டோ ஜி பிளே 5ஜி 2026 போனில் உள்ளது. பின்பு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது. IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (dust and splash resistance) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
32எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி பிளே 5ஜி 2026 போன். மேலும் 8எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன.
5200mAh பேட்டரி மற்றும் 30W சார்ஜிங் சார்ஜிங் மோட்டோ ஜி பிளே 5ஜி 2026 போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. பான்டோன் ஸ்லிப்ஸ்ட்ரீம் (Pantone Slipstream) நிறத்தில் இந்த போனை வாங்கலாம்.

விலை
மோட்டோ ஜி 5ஜி 2026 மாடலின் ஆரம்ப விலை USD 199.99 (இந்திய மதிப்பில் ரூ.17,740)-ஆக உள்ளது. பின்பு இந்த போன் டிசம்பர் 11-ம் தேதி முதல் மோட்டோரோலா .காம் தளத்தில் கிடைக்கும். அதை தொடர்ந்து ஜனவரி 15-ம் தேதி முதல் Best Buy மற்றும் அமேசான்.காம் தளங்களில் கிடைக்கும்.
மோட்டோ ஜி பிளே 5ஜி 2026 மாடலின் ஆரம்ப விலை USD 169.99 (இந்திய மதிப்பில் ரூ.15,080)-ஆக உள்ளது. பின்பு இந்த போன் நவம்பர் 13-ம் தேதி முதல் மோட்டோரோலா .காம் தளத்தில் கிடைக்கும். அதை தொடர்ந்து வரும் மாதங்களில் Best Buy தளத்தில் இந்த போன் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








