அப்படி போடு! இந்தியாவில் மீண்டும் ஒரு 5G போன் பட்ஜெட் விலையில் கொண்டுவரும் Motorola.!
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே மோட்டோ ஜி53 5ஜி மற்றும் மோட்டோ ஜி73 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாகக் கூறி இருந்த நிலையில், மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்வதாக கூறியுள்ளது. அதாவது மோட்டோரோலா நிறுவனம் விரைவில் Motorola Moto G 5G (2023) ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

மோட்டோ ஜி 5ஜி (2023)
குறிப்பாக இந்த புதிய மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இணையத்தில் கசிந்த தகவலின்படி, இந்த மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன் 16எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,6ஜிபி ரேம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி53 5ஜி
மோட்டோ ஜி53 5ஜி ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 13
ஆக்டா-கோர் குவால்காம் சிப்செட் மூலம் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுலதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி மெயின் கேமரா
மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன்.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன். குறிப்பாக சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 899 yuan (இந்திய மதிப்பில் ரூ.10,690) ஆக உள்ளது. அதேபோல் இந்தியாவில் கூட மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன் கம்மி விலையில் தான் அறிமுகமாகும்.

பட்ஜெட் விலை
அதேபோல் மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன் மாடலும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் விலையில் அதிக 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications