Home
Mobile

இந்த கம்மி விலை Moto போன்களை யார் வேண்டாம்னு சொல்லுவாங்க.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தற்போது மோட்டோ ஜி (2026) மற்றும் மோட்டோ ஜி பிளே (2026) மாடல்களை உருவாக்கி வருகிறது. கூடிய விரைவில் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய மோட்டோ போன்களின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ ஜி 2026 அம்சங்கள் (Moto G 2026 Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி (2026) ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இந்த கம்மி விலை Moto போன்களை யார் வேண்டாம்னு சொல்லுவாங்க.. எந்த மாடல்?

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் மோட்டோ ஜி (2026) போன் வெளிவரும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. பின்பு Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி ரியர் கேமராவுடன் மோட்டோ ஜி (2026) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் 5200எம்ஏஎச் பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மாஸ்,ஹை-ரெஸ் ஆடியோ, கூகுள் ஜெமினி, மோட்டோ செக்யூர், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

மோட்டோ ஜி பிளே 2026 அம்சங்கள் (Moto G Play 2026 Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி பிளே (2026) போன் வெளிவரும். பின்பு 1000 நிட் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் மோட்டோ ஜி பிளே (2026) போன் வெளிவரும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. பின்பு Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

32எம்பி ரியர் கேமரா உடன் மோட்டோ ஜி பிளே (2026) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. மேலும் 5200எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மாஸ்,ஹை-ரெஸ் ஆடியோ, கூகுள் ஜெமினி, மோட்டோ செக்யூர், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி மோட்டோ ஜி (2026) மற்றும் மோட்டோ ஜி பிளே (2026) மாடல்கள் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Photo Credit: Android Headlines

Best Mobiles in India

English summary
Moto G 2026 Moto G Play 2026 Design Renders and Specifications Leaked: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X