Home
Mobile

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Moto 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ எட்ஜ் 30 (Moto Edge 60 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஜூன் 10) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்புடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு மோட்டோ எட்ஜ் 30 போனின் விலை மற்றும் அம்சங்களை வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ எட்ஜ் 30 அம்சங்கள் (Moto Edge 60 5G specifications) : மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் வசதி உடன் புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Moto 5ஜி போன்.. சோனி கேமரா..

6.7-இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே (quad-curved pOLED Display) டிஸ்பிளே வசதியுடன் புதிய மோட்டோ எட்ஜ் 30 போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 10-பிட் கலர்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i), எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் OIS ஆதரவு கொண்ட் 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) மற்றும் IP69 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுகளுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவரும். மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி உடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

தரமான டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் வி5.4, வைஃபை 6, டூயல் சிம் 5ஜி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய மோட்டோரோலா போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.50,000க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் பான்டோன் ஜிப்ரால்டர் சீ (PANTONE Gibraltar Sea), பான்டோன் ஷாம்ராக் (Pantone Shamrock) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். பின்பு பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ எட்ஜ் 30 போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Moto Edge 60 will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X