இது வேற ரகம்.. பட்ஜெட் விலை.. 5000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 50எம்பி கேமரா.. ஐபி68 ரேட்டிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இந்த மாதம் இறுதியில் மோட்டோ எட்ஜ் 40 நியோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
காரணம் என்னவென்றால், இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) ஸ்மார்ட்போன் ஆனது தரமான அம்சங்களுடன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோட்டோ எட்ஜ் 40 நியோ போனின் விலை, நிறங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன.

அதாவது பிளாக் பிளாக் பியூட்டி (Black Beauty), சோதிங் சீ (Soothing Sea) மற்றும் கேனீல் பே (Caneel Bay) நிறங்களில் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் P-OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ எட்ஜ் 40 நியோ போனின் டிஸ்பிளே.
மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1050 (MediaTek Dimensity 1050) சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் எட்ஜ் 40 நியோ போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிமைரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன்.
ஐபி68 ரேட்டிங் (IP68 rating), டால்பி ஆடியோ வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோ எட்ஜ் 40 நியோ போன் வெளிவரும்.
மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போனின் எடை 170 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் வெளியான தகவலின்படி, மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் ஆனது குறைந்த எடையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








