Home
Mobile

பட்ஜெட் விலை.. 32எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது புதிய மோட்டோரோலா போன்.. என்ன மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் வரும் மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து மோட்டோ எட்ஜ் 40 நியோ எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

தற்போது மோட்டோ எட்ஜ் 40 நியோ கீக்பெஞ்ச் வலைத்தளத்தில் காணப்பட்டது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் இணையதளங்களில் வெளியாக உள்ளன. குறிப்பாக இந்த போன் தரமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

5000 எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது புதிய மோட்டோரோலா போன்.. என்ன மாடல்?

மோட்டோ எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) ) டிஸ்பிளேவுடன் வெளிவரும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1050 ( MediaTek Dimensity 1050) சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி பிமைரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த போன் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபி68 ரேட்டிங் (IP68 rating), டால்பி ஆடியோ வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவரும் மோட்டோ எட்ஜ் 40 நியோ போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் மோட்டோரோலா நிறுவனம் வரும் மாதங்களில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto Edge 40 Neo Spotted on Geekbench: Key Specifications Leaked Online: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X