மீண்டும் மீண்டுமா.. 32எம்பி செல்பி கேமரா.. 68W ஃபாஸ்ட் சார்ஜிங்.. வருகிறது மோட்டோ போன்.. எந்த மாடல்?
மோட்டோ ஜி54 5ஜி மற்றும் மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு பிறகு மோட்டோ எட்ஜ் 40 நியோ 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். தற்போது வெளியான தகவலின்படி, செப்டம்பர் 15-ம் தேதி இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ 5ஜி போனின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லைட் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் P-OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ எட்ஜ் 40 நியோ போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1050 (MediaTek Dimensity 1050) சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் எட்ஜ் 40 நியோ போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிமைரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன்.

அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் ஐபி68 ரேட்டிங் (IP68 rating), டால்பி ஆடியோ வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோ எட்ஜ் 40 நியோ போன் வெளிவரும்.
இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 6W வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போன் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications