Home
Mobile

P-OLED டிஸ்பிளே.. 12ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. இதுதான் புது மோட்டோ போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. மேலும் இந்நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் 40 நியோ எனும் ஸ்மார்ட்போனை வரும் வாரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இதுகுறித்து விரிவான தகவலை இப்போது பார்ப்போம்.

50எம்பி கேமரா.. இதுதான் புது மோட்டோ போன்.. எந்த மாடல்?

அதாவது வளைந்த டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ எட்ஜ் 40 நியோ போன். அதேபோல் இந்த போனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. குறிப்பாக மோட்டோ எட்ஜ் 40 நியோ போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் P-OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ எட்ஜ் 40 நியோ போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1050 (MediaTek Dimensity 1050) சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் எட்ஜ் 40 நியோ போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிமைரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன்.

ஐபி68 ரேட்டிங் (IP68 rating), டால்பி ஆடியோ வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோ எட்ஜ் 40 நியோ போன் வெளிவரும்.

மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போனின் எடை 170 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto Edge 40 Neo New renders released: Specifications and price leaked online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X