இப்படியொரு சூப்பரான கேமரா போனுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன Motorola
மோட்டோரோலா நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக கேமரா மற்றும் சிப்செட் போன்றவைகளுக்கு அதிக கவனம் செலுத்துகிறது இந்நிறுவனம்.

200எம்பி கேமரா
இந்நிலையில் உலகின் முதல் 200எம்பி கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா. அதாவது இந்நிறுவனம் விரைவில்மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் தான் 200எம்பி கேமராவசதியும் உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானால் டிஎஸ்எல்ஆர் கேமராக்களுக்கு வேலையே இருக்காது எனறே கூறலாம்.
அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராபோன் ஆனது சாம்சங் நிறுவனத்தின் 200எம்பி ISOCELL HP1 சென்சார்-ஐ பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்தஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200எம்பி கேமராவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.இப்போது இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

AMOLED டிஸ்பிளே
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற பல அசத்தலான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறனை கொண்டது. அதேபோல் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த இந்த சிப்செட் மிக அருமையாக உதவும்.

அதேபோல் ஒரு நல்ல கேமிங் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஒரு நல்ல தேர்வாகும். மேலும்இந்த புதிய ஸ்மார்ட்போன் கருப்பு, நீல நிறங்களில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ட்ரிபிள் ரியர் கேமரா
இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே60எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம்
புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது MyUX OS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4500 எம்ஏஎச் பேட்டரி
இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பதில் 5000 எம்ஏஎச் அல்லது 5500 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டால் இன்னமும் அருமையாக இருக்கும்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா போனில் 125W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த போனை சில நிமிடங்களில்சார்ஜ் செய்ய முடியும். இப்போது அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி
அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.மேலும் வைஃபை, 5ஜி, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதியமோட்டோ ஸ்மார்ட்போன்.

இந்திய சந்தையில் கண்டிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். முன்பு கூறியது போல் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விட துல்லியமாக படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications