அப்படி போடு: மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! நம்பி வாங்கலாம்.!
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் இரண்டு போன்களுக்கு விலை குறைப்பை அறிவித்தது. இந்நிலையில் மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்து அசத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைகுறைப்பு
அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் முன்பு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது, தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் முன்பு ரூ.29,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது, தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.26,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ எட்ஜ் 30 அம்சங்கள்
இந்த மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 2460 x 1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்த மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் 4020 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இதில் உள்ளது.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








