Home
Mobile

48எம்பி கேமராவுடன் தரமான மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!

மிகவும் எதிர்பார்த்த மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அக்வா ப்ளூ, மினரல் கிரே மற்றும் Satin Coral உள்ளிட்ட நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ இ7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம்

மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்கிற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

 2ஜிகாஹெர்ட்ஸ்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 2ஜிபி ரேம் மற்றும்

மோட்டோ இ7 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்படும்.

 பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்

மோட்டோ இ7 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிஸ்டண்ட்

இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் மாடல்.

ளூடூத் 5.0, ஜிபிஎஸ்,

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோடடோ இ7 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.10,550-ஆக
உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto E7 With 48MP rear camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X