Home
Mobile

விரைவில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் களமிறங்கும் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோடடோ இ7 பவர் ஸ்மார்ட்போன் மாடலை வரும் பிப்ரவரி 17-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான கேமரா மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் பட்ஜெட் விலையில்
வெளியாகும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

720x1,600 பிக்சல் தீர்மானம்

720x1,600 பிக்சல் தீர்மானம்

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

13எம்பி பிரைமரி சென்சார்

13எம்பி பிரைமரி சென்சார்

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோ இ7 பவர்

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோ இ7 ப

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வசதி இருப்பதால் மிகவும் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். மேலும் 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். முன்பு குறிப்பிட்டபடி இந்த சாதனம் பட்ஜெட் விலையில் தான் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Moto E7 Power May Launching Soon in India: Here the Details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X