Home
Mobile

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்: மோட்டோ E7 பிளஸ்

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அன்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் பல்வேறு அட்டகாசன அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இதன் வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர்டிராப்

மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரளவு பெரிய டிஸ்பிளே கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் ஆன்லைன் கேம், திரைப்படம், ஆப் வசதி உள்ளிட்ட அனைத்திற்கும் பயன்படுத்த அருமையாக இருக்கும்.

மோட்டோ இ7 பிளஸ்

இந்த மோட்டோ இ7 பிளஸ்ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாககொண்டுவெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் கேமரா மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

48எம்பி பிரைமரி + 2எம்பி டெப்த் சென்சார்

மோட்டோ இ7 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது பட்ஜெட் விலையில் 48எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளதால்கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெரும். மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போன் கேமரா கொண்டு மிகத்துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

 460என்எம் பிராசஸ

மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460என்எம் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே

மோட்டோ இ7 பிளஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 விருப்பங்களில் 4 ஜி, புளூடூத் 5.0,

இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, புளூடூத் 5.0, வைஃபை 802.11 பி / ஜி / என், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பல அம்சங்களுடன் வெறும் ரூ.9,499 என்ற விலையில் மிஸ்டி ப்ளூ மற்றும் ட்விலைட் ஆரஞ்சு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் சிறந்த கேமரா வசதி, சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம்
வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto E7 Plus Review In Tamil: Should you buy it?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X