Moto E7 Plus: அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் இதுதான் பெஸ்டாக இருக்குமோ?
மோட்டோரோலா நிறுவனம் தற்போது புதிய மோட்டோ E சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது. மோட்டோ E7 பிளஸ் என்ற பெயரில் ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வெகு விரைவில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் மோட்டோ இ 7 பிளஸ் போன் விவரக்குறிப்புகள் மற்றும் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக ஆன்லைனில் கசிந்துள்ளது.

ரெண்டர் தகவல்கள் மோட்டோ இ 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் உடன் வரும் என்பதைக் காட்டுகின்றது. பின்புறத்தில், இரட்டை கேமரா அமைப்புடன், அதற்குக் கீழே, மோட்டோவின் பேட்விங் லோகோவுடன் கைரேகை ஸ்கேனர் உள்ளது. வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் உடன் மூன்றாவது பாட்டனாக பிரத்யேக கூகிள் அசிஸ்டன்ட் உடன் வருகிறது. மோட்டோ இ 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக வலைத்தளத்தில் கசிந்துள்ள தகவலின்படி, மோட்டோ இ 7 பிளஸ் ஸ்மார்ட்போன், 6.5' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. எதிர்பார்க்கப்படும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்.டி உடன் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரியுடன் ஸ்னாப்டிராகன் 460 என்எம் பிராசஸருடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 எம்.பி பிரதான சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான செல்ஃபி மற்றும் வீடியோ கால்லிங் அழைப்பு அனுபவத்திற்காக முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி ஷூட்டர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ 7 பிளஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி வழியாக 10W சார்ஜிங் கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. வின்ஃபியூச்சரின் அறிக்கையின்படி, மோட்டோ இ 7 பிளஸ் ஸ்மார்ட்போன், 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .13,000 என்ற விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ இ 7 பிளஸ், மிஸ்டி ப்ளூ மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications