பட்ஜெட் விலைதான்: அட்டகாச அம்சங்களோடு மோட்டோ இ7 பிளஸ் செப்டம்பர் 23 அறிமுகமா?

|

மோட்டோ இ 7 பிளஸ் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மோட்டோ இ 7 பிளஸ் இந்திய அறிமுகம்

மோட்டோ இ 7 பிளஸ் இந்திய அறிமுகம்

மோட்டோ இ 7 பிளஸ் இந்தியாவில் செப்டம்பர் 23 மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி மற்றும் நேரம் பிளிப்கார்ட் பக்கத்தில் பட்டியிலடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பிளிப்கார்ட் பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை வெளிப்படுத்தவில்லை.

ஒரே சேமிப்பு வேரியண்ட்

ஒரே சேமிப்பு வேரியண்ட்

இருப்பினும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் மோட்டோ இ7 பிளஸ் மூலம் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்கள் மற்றும் ஒற்றை சேமிப்பு வேரியண்ட்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டோ இ7 பிளஸ் இந்திய விலை

மோட்டோ இ7 பிளஸ் இந்திய விலை

மோட்டோ இ7 பிளஸ் இந்திய விலை இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இதன்விலை யூரோப்பில் 149 யூரோவாக உள்ளது. இதன் இந்திய மதிப்புப்படி ரூ.13,000 ஆகும். இந்த ஸ்மார்ட்போனானு நேவி ப்ளூ மற்றும் ப்ரான்ஜ் ஆம்பர் வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்., வீட்டில் இருந்துனாலும் ஓகே- பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்., வீட்டில் இருந்துனாலும் ஓகே- பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

மோட்டோ இ7 பிளஸில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில். இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் இயக்கப்படும் எனவும் 6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 460 எஸ்ஓசி ஆதரவு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48 மெகாபிக்சல் பிரதான கேமரா

48 மெகாபிக்சல் பிரதான கேமரா

மோட்டோ இ7 பிளஸ் டூயல் கேமரா ஆதரவு எனவும் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்டிருக்கும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இதில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

64 ஜிபி சேமிப்பு ஆதரவு

64 ஜிபி சேமிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது 64 ஜிபி சேமிப்பு ஆதரவு கொண்டிருக்கும் எனவும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு ஸ்லாட் வசதி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ப்ளூடூத் வி5, வைபை 802, 3.5மிமீ ஆடியோ ஜாக், பின்புற பிங்கர் பிரண்ட் அம்சம் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto E7 Plus May Launch on September 23 in India: Here the Expected Price and Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X