விரைவில் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இ7.!
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தனது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் ரூ.9,499-விலையில் அறிமுகம் செய்தது. குறிப்பாக மோட்டோ இ7 பிளஸ் சிறந்த தொழில்நுட்ப வசதி மற்றும் அட்டகாசமான கேமரா வசதிகளுடன் வெளவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்நிறுவனம் அதன் இ-சீரிஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்கிறது மற்றும் அது மோட்டோ இ7 என அழைக்கப்படும்.

மேலும் இந்த லேட்டஸ்ட் மோட்டோ ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஸ்பெக்ஸ் பட்டியல் வழியாக லீக் ஆகியுள்ளது. பின்பு வெளியான ஸ்பெக்ஸ் பட்டியலின் படி, மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் எச்டி + ரெசல்யூஷன், 720 x 1520 பிக்சல்களை கொண்டுள்ளது.

மோட்டோ இ7 சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் உறுதியளிக்கிறது.

மோட்டோ இ7 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் முன்பக்கத்தை பொறுத்தவரை, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது, இது டிஸ்பிளேவின் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெக்ஸ் பட்டியல் ஸ்மார்ட்போனை இயக்கும் சிப்செட்டை வெளிப்படுத்தவில்லை. ஆனால் வெளியான தகவல்களின் படி, இது ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மோட்டோ இ7 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

குறிப்பாக மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10ஓஎஸ் மூலம் இயங்குகிறது. பின்பு 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி டிஸ்பிளே, 20:9 என்கிற திரை விகிதம், ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ், மைக்ரோ யூஎஸ்பி வழியாக 10W சார்ஜிங் கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

பின்பு மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 460என்எம் ப்ராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு இதன் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் (எஃப் / 2.2) செல்பீ கேமராவை ஹோல்-பன்ச் கட்வுட்டில் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications