5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மோட்டோ இ6.!
மோட்டோ இ6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் தற்சமயம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்

டிஸ்பிளே:
மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:
இக்கருவி 32-பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
மோட்டோ இ6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்
என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
மோட்டோ இ6 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு உள்ளதுää பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
பேட்டரி:
மோட்டோ இ6 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்றும், பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில்
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications