மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.!
மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் எப்ரல் மாதம் முதல் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட் போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மெட்டல் யுனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாடெக் சிப்செட் வசதியுடன் இக்கருவி வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் எப்ரல் மாதம் முதல் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.
ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோ இ5 பிளஸ் சாதனம் 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு மோட்டோ இ5 பிளஸ் சாதனம் வெளிவரும்.

மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications