Home
Mobile

யாருடனும் போட்டி போடாத மோட்டோ இ5 பிளஸ் (வடிவமைப்பு, அம்சங்கள்).!

பிரபல டிப்ஸ்டர் ஆன விபோ வழியாக கசிந்துள்ள இந்த புகைப்படகளானது, மோட்டோ இ5 பிளஸ் சாதனத்தின் வடிவமைப்பு சார்ந்த குறிப்புகளை அதிகம் வெளிப்படுத்தியுள்ளது.

By Muthuraj

மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த வெளியீடான மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் கிராபிக் புகைப்படங்கள் பல முறை இணையத்தில் கசிந்துள்ளன. எனினும், சமீபத்திய கசிவில் எதிர்பார்க்கப்படும் ஆண்ட்ராய்டு தொலைபேசியான மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரபல டிப்ஸ்டர் ஆன விபோ வழியாக கசிந்துள்ள இந்த புகைப்படகளானது, மோட்டோ இ5 பிளஸ் சாதனத்தின் வடிவமைப்பு சார்ந்த குறிப்புகளை அதிகம் வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, மோட்டோ இ5 பிளஸ் ஆனது உலோக / பாலிகார்பனேட் ஷெல் கொண்டு கட்டமைக்கப்பட்ட மென்மையான மற்றும் பளபளப்பான பின்பக்கத்தை கொண்டுள்ளது. இருப்பினும் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே ஒரு பெரிய வட்ட வடிவிலான கேமரா தொகுதி மற்றும் மோட்டோ லோகோ ஆகியவற்றை கொண்டுள்ளது.

எல்இடி ப்ளாஷ் கொண்ட பின்புற கேமரா

எல்இடி ப்ளாஷ் கொண்ட பின்புற கேமரா

வேறுபாடுகளை பொறுத்தமட்டில், மோட்டோ இ5 பிளஸ் ஆனது எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒற்றை பின்புற கேமராவை கொண்டுள்ளது மற்றும் பின்புறத்தில் உட்பொதிக்கப்பட்டுள்ள லோகோவானது ஒரு கைரேகை சென்சாராகவும் செயல்படும். முன்பக்கத்தை பொறுத்தமட்டில், எந்த விதமான பொத்தானும் இல்லை. முன்னர் வெளியான உயர் இறுதியில் எக்ஸ் தொடர் கருவிகளில் இரட்டை பின்புற கேமரா இடம்பெற்றிந்ததும், லோகோவில் எந்தவிதமான சிறப்பு பொத்தானும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

மோட்டோ இ5 பிளஸ் ஆனது, ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளதால் முன்பக்க கேமராவானது சில உணர்கருவிகளை அதன் மேல் வலது மூலையில் அமைந்துள்ளது. வெளியான புகைப்படத்தில் ஹோம் பொத்தான் இல்லை என்பதால், மோட்டோரோலா அதன் பயோமெட்ரிக் சென்சரை கையாளவுள்ளதென்பது உறுதியாகியுள்ளது. அதற்கு அப்பால், படத்திலிருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை.

மோட்டோ இ5 பிளஸ்

மோட்டோ இ5 பிளஸ்

மோட்டோ இ5 தொடரின் கீழ் வெளியான மூன்று ஸ்மார்ட்போன்களில் உயர் இறுதியில் கருவியான, மோட்டோ இ5 பிளஸ் ஆனது ஒரு 5.8 அங்குல எச்டி+ (1440x720பிக்சல்கள்) 18: 9 விகிதம், 3 ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, ஒரு 5000 எம்ஏஎச் பேட்டரி, 16எம்பி பின்புற கேமரா, 8 எம்பி செல்பீ கேமரா ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.

மோட்டோ இ5

மோட்டோ இ5

மறுகையில் உள்ள மோட்டோ இ5 ஆனது ஒரு 5.5 அங்குல எச்டி (1280x720 பிக்சல்கள்) டிஸ்பிளே, 3 ஜிபி ரேம், 32 ஜிபி அளவிலான உள்ளடக்கசேமிப்பு, ஒரு 3028 எம்ஏஎச் பேட்டரி, 16எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு 5எம்பி செல்பீ கேமரா ஆகிய அம்சங்களை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
மோட்டோ இ5 பிளே

மோட்டோ இ5 பிளே

லோ-எண்ட் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ இ5 பிளே ஆனது, ஒரு சிறிய 5.2 அங்குல எச்டி (1280x720 பிக்சல்கள்) டிஸ்பிளே, 2 ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு, 12 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் ஒரு 4,000எம்ஏஎச்பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாமென்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto E5 Plus images leaked ahead of launch: Design language revealed. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X