இந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.!

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு (மோட்டோ E5 பிளஸ்) மீது ரூ.800 தள்ளுபடி கேஷ்பேக்காக அளிக்கப்படும்.

|

மோட்டோ E5 பிளஸில் இரட்டை கேமரா இருப்பது போன்ற அமைப்பு இருந்தாலும், ஒரே ஒரு கேமரா மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை, மோட்டோரோலா நிறுவனம் நேற்று (ஜூலை 10, 2018) அறிமுகம் செய்தது. இதில் அமேசான் விற்பனைக்காக பிரத்யேகமான ஸ்மார்ட்போனாக மோட்டோ E5 பிளஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மோட்டோ E5, நாடெங்கிலும் உள்ள எல்லா மோட்டோ கடைகளிலும் கிடைக்கும். மோட்டோ E5 பிளஸ் ரூ.11,999 என்ற விலை நிர்ணயத்திலும், மோட்டோ E5 ரூ. 9,999 என்ற விலை நிர்ணயத்திலும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

கிடைக்கும் விவரம்

கிடைக்கும் விவரம்

மோட்டோ E5 பிளஸின் விற்பனை இன்று (ஜூலை 11, 2018) மதியம் 12 மணியில் இருந்து அமேசானிலும் மோட்டோ E5 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (ஜூலை 11, 2018) முதல் மோட்டோ விற்பனையகங்கள் மூலமும் கிடைக்கப் பெறும்.

சலுகைகள்

சலுகைகள்

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு (மோட்டோ E5 பிளஸ்) மீது ரூ.800 தள்ளுபடி கேஷ்பேக்காக அளிக்கப்படும்

குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளில் 6 மாதங்கள் வரை (மோட்டோ E5 பிளஸ்) இஎம்ஐ கட்டணம் கிடையாது

ஜியோ அளிக்கும் 4ஜி டேட்டா (மோட்டோ E5 மற்றும் மோட்டோ E5 பிளஸ்) 130 ஜிபி 4ஜி இலவசமாக அளிக்கப்படுகிறது

மோட்டோ E5 சிறப்பம்சங்கள்

மோட்டோ E5 சிறப்பம்சங்கள்

மோட்டோ E5 இல் 5.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் 1440x720px பகுப்பாய்வைப் பெற்று, வளைந்த கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாப்பையும் நவீனமான 18:9 அம்ச விகிதத்தில் அமைந்த டிஸ்ப்ளேயும் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுவதோடு, 2 ஜிபி ரேம் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பின்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்கத்தை நோக்கிய செல்ஃபி கேமரா ஆகியவை, ஒரு LED ஃபிளாஷ் உடன் இயக்கப்படுகிறது. இவை அனைத்தும் 4000 mAh பேட்டரியில் இயக்கப்பட, அதை 10W (5V and 2A) டர்போ சார்ஜிங் ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் கலப்படம் இல்லாத ஆண்ட்ராய்டு 8 ஓரியோ அனுபவத்தை பெற முடிகிறது.

மோட்டோ E5 பிளஸ் சிறப்பம்சங்கள்

மோட்டோ E5 பிளஸ் சிறப்பம்சங்கள்

E5 போலவே, E5 பிளஸிலும் 5.7 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உடன் 2.5D வளைந்த கடின கிளாஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதனுடன் 1440 x 720p பகுப்பாய்வு டிஸ்ப்ளே அளிக்கப்படுகிறது. இதன் உள்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்பட்டு, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பகம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி முதன்மை கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா ஆகியவை காணப்படுகிறது. இவை இரண்டும் மோட்டோ E5 இல் உள்ளது போலவே, ஒரு LED ஃபிளாஷ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த E5 பிளஸ் இல் ஒரு சிறப்பான 5000 mAh லை-அயன் பேட்டரியைப் பெற்று, 15W டர்போ பாஸ்ட் சார்ஜிங் ஆதரித்து 3 மணிநேரத்தில் 0 இலிருந்து 100% சார்ஜ் அளவை எட்டி விடுகிறது.

முடிவு

முடிவு

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, நவீன மற்றும் பிரிமியம் தரத்திலான வடிவமைப்பை கொண்ட விலைக் குறைவான ஒரு ஜோடி ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது எனலாம். அதே நேரத்தில், மோட்டோ E5 மற்றும் மோட்டோ E5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை விட, சிறப்பான ஒரு கூட்டம் சிறப்பம்சங்களை அளிக்கக் கூடிய ஏராளமான பிற ஸ்மார்ட்போன்களும் சந்தையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Moto E5 E5 Plus officially launched in India Price features offers and more: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X