48எம்பி கேமராவுடன் விரைவில் களமிறங்கும் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது மோட்டோ இ40 ஸ்மார்ட்போன்.

மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இ40 ஸ்மார்ட்போனில் Unisoc T700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் மோட்டோ இ40. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இதன் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோ இ40 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன்.கண்டிப்பாக துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் எடுக்க முடியும்.

இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மாடல்.

இரட்டை சிம் ஆதரவு, வைஃபை, ப்ளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ இ40 ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனின் எடை 198 கிராம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இப்போது அமேசான் மற்றும்
பிளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் பல்வேறு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் கிடைக்கிறது. எனவே விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications