ரூ.8,999-க்கு கிடைக்கும் அருமையான மோட்டோ இ4.!
மோட்டோ 4 பின்புற ரியர் கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.
மோட்டோரோலா ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது புதிய மோட்டோ இ4 என்ற ஸ்மார்ட்போனை ரூ.8,999-விலைக்கு விற்பனை செய்கிறது,விரைவில் மோட்டோ இ4 பிளஸ் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் மொபைல் சந்தையில் பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் (720-1280) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, இந்த ஸ்மார்ட்போன். இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

16ஜிபி மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 16ஜிபி மெமரிக் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.மேலும் இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:
மோட்டோ 4 பின்புற ரியர் கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

சாப்ட்வேர்:
மோட்டோ 4 பொதுவாக 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டிகே6737எம் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ,என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
மோட்டோ இ4 பொருத்தவரை 2800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி.


Click it and Unblock the Notifications