Subscribe to Gizbot

5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் உடன் மோட்டோ இ4 ப்ளஸ்.!

Written By:

மோட்டோரோலாவின் நான்காவது தலைமுறை கருவிகளான மோட்டோ இ தொடர் ஸ்மார்ட்போன்கள் பற்றிய கசிவுகள் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்த முறை மோட்டோ இ4 பிளஸ் சார்ந்த ப்ளெக்ஸ் தகவல்கள் தலைப்பு செய்திகளை உருவாக்குகிறது. இந்த சாதனத்தின் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பு விவரங்கள் ஏற்கனவே பல முறை வெளியான நிலைப்பாட்டில் இப்போது மோட்டோ இ4 பிளஸ் விலையும் கசிந்துள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் உடன் மோட்டோ இ4 ப்ளஸ்.!

ட்விட்டர் பயனர் ஆண்ட்ரி யாதிம் கூறுகையில், மோட்டோ இ4 பிளஸ் சிம்-ப்ரீ அன்லாக்டு மாறுபாடாக சுமார் ரூ.13,200/- என்ற விலை நிர்ணயம் பெறும் என்று கூறியுள்ளார். இது முந்தைய வதந்தியைப் போலவே அதே விலை வரம்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரூ.13,300/-

ரூ.13,300/-

முந்தைய கசிவுகள் மோட்டோ இ4 பிளஸ் சுமார் ரூ.13,300/- என்ற விலையில் இரண்டு மாறுபாடுகளில் வரும் என்று தெரிவிக்கின்றன - 3 ஜிபி ரேம் வேரியண்ட் சற்று அதிக விலை கொண்டு வரும் என்று கூறப் பட்டிருந்தது. எப்படியிருந்தாலும், மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ விலை தொலைபேசிகள் சார்ந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு பெறும்போது தான் அறியப்படும், மேலும் பிராந்தியங்களின் அடிப்படையில் விலை மாறுபடும்.

வடிவமைப்பு மாற்றங்கள்

வடிவமைப்பு மாற்றங்கள்

யாதிம் வெளியிட்டுள்ள தகவலின் கீழ் ஸ்மார்ட்போனின் விலை நநிர்ணயம் மட்டுமின்றி முன்பு வெளியான லீக்ஸ் தகவல்களை உறுதிப்படுத்தபட்டுள்ளன. அவ்வாறாக, மோட்டோ இ4 பிளஸ் ஆனது மோட்டோ இ4 கருவியோடு ஒப்பிடும்போது மட்டுமே சற்றே பெரிய அளவில் மற்றும் சில வடிவமைப்பு மாற்றங்கள் கொண்டிருக்கும்.

மெல்லிய பெஸல்கள்

மெல்லிய பெஸல்கள்

முக்கியமாக, பிங்கர் பபிரிண்ட் சென்சாருக்கு அடியில் முகப்பு பொத்தானைக் கொண்டிருக்கும். மோட்டோ இ4 ப்ளஸ் கருவியில் அதன் முன்னோடி கருவியை விட மெல்லிய பெஸல்கள் இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

மோட்டோ இ4 பிளஸ் வதந்திகளுக்கான குறிப்புகளின்படி, இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட், 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) காட்சி மற்றும் 1.2ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் எம்டி6737எம் கார்டெக்ஸ்- ஏ53 க்வாட்-கோர் சிப்செட் கொண்டு 2ஜிபி அல்லது 3ஜிபி ரேம் உடனான மாலி- டி720எம்ப2 ஜிபியூ ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.

5000எம்ஏஎச்

5000எம்ஏஎச்

உடன் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் (128 ஜிபி வரை) வழியாக விரிவாக்க விருப்பத்துடன் 16ஜிபி சேமிப்பும் கிடைக்கலாம். ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமராம் மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவுடன் 5000எம்ஏஎச் அகற்றக்கூடிய பேட்டரி கொண்டு வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ்

மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ்

இக்கருவி 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் வி4.2, என்எப்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகள்), வைஃபை, எப்எம் ரேடியோ, மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு விருப்பங்களையும் வழங்குகிறது.

தோராயமாக ரூ.10,500/-

தோராயமாக ரூ.10,500/-

மறுபக்கம் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 17-ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய கசிவுகள் மோட்டோ இ4 கருவியானது தோராயமாக ரூ.10,500/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்று கூறுகிறது

2800எம்ஏஎச்

2800எம்ஏஎச்

மோட்டோ இ4 கருவியாதிகு 294பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட 5 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 8 மெகாபிக்சல் பின்புற சென்சார்உடன் ஒரு 2800எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி மூட்டை கொண்டு லூனார் சாம்பல் வண்ண விருப்பங்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Moto E4 Plus Price Leaks Alongside Render Image. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot