மோட்டோ இ4 பிளஸ் இன்று களம் இறங்குகிறது.!
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/ 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டது, மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் மூலம் விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.!
எதிர்பார்த்தபடி இந்தியாவில் லெனோவாவின் மோட்டோ பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது, மேலும் இவை சிறந்த பட்ஜெட் எனக் கூறப்படுகிறுது, பல்வேறு மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்படுகிறது, அதன்பின் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இதற்க்கு முன் வந்த மோட்டோ இ4 விலைப் பொருத்தவரை ரூ.8,999ஆக இருந்தது, மேலும் இப்போது வெளியிடப்படும் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.11,600 ஆக இருக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இன்று மதியம் 12மணி அளவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ4 பிளஸ்:
மோட்டோ இ4 பிளஸ் ஆனது ஒரு 5.5 அங்குல (1280 -720 பிக்ஸல்) எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் ட்ரெனோ 308 ஜிபியூ உள்ளன.

ஸ்னாப்டிராகன் 427:
1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 427 செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதன்பின் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

2ஜிபி ரேம் :
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/ 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டது, மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் மூலம் விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

கேமரா ;
பின்புற கேமரா துறையில், எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.0 கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1:
ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இந்த தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ஒரு ஈர்க்கக்கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications